பிஸ்ஸா செய்வது எப்படி?

by Admin / 29-07-2021 03:44:22pm
பிஸ்ஸா செய்வது எப்படி?

பிஸ்ஸா

தேவை

மைதா – 250 கிராம்

சீனி – 2 தேக்கரண்டி 1/4 தேக்கரண்டி ஈஸ்ட் உடன் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும்

உப்பு – 1 தேக்கரண்டி

வெண்ணெய் – 1 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி

செய்முறை

       ஈஸ்ட் தயார் செய்து, மாவில் பேக்கிங் பவுடர் சலித்து, வெண்ணெய், உப்பு, சேர்த்து நன்கு கலந்து நாணுக்கு தயாரிப்பது போலவே மாவு பிசைந்து சற்று விரிவான பாத்திரம் (8 அங்குல விட்டம் 2 அங்குல உயரம்) ஒன்றில் நெய் தடவி, பாத்திரம் கொள்ளும் அளவு மாவு அரை செ.மீ. கம் இருக்கும் படி விரித்து வைக்கவும். வெண்ணெய் தடவி மாவை பேக்கிங் அடுப்பில் வைத்து 350 டிகிரியில் முக்கால் பாகம் வேகும் வரை வைத்து எடுக்கவும்.

 

 

பிஸ்ஸாவினுள் பரப்புவதற்கு

தக்காளி – 300 கிராம்

குடைமிளகாய் – 1

மிளகாய் சாஸ் – 2 தேக்கரண்டி

பூண்டு – 4 பல்

வற்றல் தூள் – 1 தேக்கரண்டி

வெள்ளரிக்காய் – 1

பெரிய வெங்காயம் – 1

சீஸ் – 50 கிராம்

இஞ்சி சிறிய துண்டு உப்பு

செய்முறை

          வெங்காயம், பூண்டு, இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி, போட்டு வதக்கி, தக்காளித்துண்டுகளை போட்டு வதக்கவும். உப்பு, வற்றல் தூள் போடவும். சாஸ் மாதிரி கெட்டியானவுடன் இறக்கவும். 2 தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை வட்டவடிவில் வெட்டி குடைமிளகாயையும் நறுக்கி, சுட்டு வைத்திருக்கும் முக்கால் பங்கு வெந்த பிஸ்ஸாவின் உள்ளே காய்கறிகளை அடுக்கி, தக்காளி சாஸ் ஊற்றி சீஸ்ஸை துருவி மேலே தூவிக் கொள்ளவும். வெண்ணெய் 2 தேக்கரண்டி மேலே சாப்பிட்டு மறுபடியும் 10 நிமிடம் 350 டிகிரி F சூட்டில் வேக வைக்கவும். சிறு துண்டுகளாக வெட்டிச் சாப்பிடவும்.

 

 

Tags :

Share via