நல்ல ஹோரை பார்த்துச் செய்யுங்கள் என்று சொல்கிறார்களே? அது என்ன?

by Admin / 02-08-2021 10:12:29pm
நல்ல ஹோரை பார்த்துச் செய்யுங்கள் என்று சொல்கிறார்களே? அது என்ன?

 

      ஹோரை ஏழு வகைப்படும். இது ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஹோரை என்று கணக்கிடப்படும். சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என தினத்துக்கு ஒன்று அந்தந்த கிழமையை அடிப்படையாக வைத்து வரும். ஞாயிறு காலை 6.00 லிருந்து 7.00 வரை சூரிய ஹோரை. திங்கள் கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 வரை சந்திரன் ஹோரை.. புதன் கிழமை புதன் ஹோரை, வியாழன் குருஹோரை, வெள்ளி சுக்ரஹோரை, சனிக்கிழமை சனிஹோரைவளர்பிறையில் புதன், வியாழன், சுக்கிரன், சந்திரன் ஹோரையில் நல்ல காரியங்கள் செய்யலாம். ஒரு நாளுக்கு பதினாறு முகூர்த்தங்கள். ஒரு முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேரமாகும். உத்தி, அமிர்தம், லாபம், தனம், சுகம், உத்தி என்ற முகூர்த்த நேரங்களில் சுப காரியங்கள் செய்யலாம். மற்ற காலங்கள் இராகு, எமகண்டங்கள் நல்ல காரியம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

 

Tags :

Share via