ஆப்பில் அல்வா செய்வது எப்படி?

by Admin / 02-08-2021 10:33:17pm
ஆப்பில் அல்வா செய்வது எப்படி?

 

தேவை

ஆப்பிள் துறுவியது – 200 கிராம்

கோதுமை மாவு – 200 கிராம்

நெய் – 100 மில்லி

ஏலத்தூள்சிறிதளவு

சீனி – 400 கிராம்

பால் – 200 மில்லி

முந்திரிபருப்புசிறிதளவு

கேசரி பவுடர்சிறிதளவு

செய்முறை

       பாலில் ஆப்பில் துருவியது போட்டு வேகவிடவும். நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து கேசரிபவுடர் சேர்த்து கிளறவும். சீனியையும் கலந்து சற்று இறுகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும். அல்வாபதம் வந்ததும் முந்திரிபருப்பு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிவிடவும். இது சுவையாக இருக்கும். உடம்புக்கு சத்தானது.

 

Tags :

Share via