சுதந்திர தினத்தன்று வெளியாகிறதா குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்?

by Admin / 04-08-2021 12:33:49pm
சுதந்திர தினத்தன்று வெளியாகிறதா குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்?



குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து சுதந்திர தினத்தன்று அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டமன்றத் தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

 இந்நிலையில் திமுக வெற்றி பெற்று நான்கு மாதங்கள் ஆன நிலையில் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை,

மேலும் தமிழக அரசு தற்போது நிதி நெருங்கடியில் சிக்கி இருப்பதால்  குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தாமல் தாமதம் செய்து வருகிறது. இது, பெண்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தரப்பில், இத்திட்டத்தை உடனே செயல்படுத்துமாறு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக சார்பில், சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  சமூக வலைதளங்களிலும், மாதம், 1,000 ரூபாய் வழங்குவது  பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பது போன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை விமர்சித்து, திமுகவுக்கு எதிராக கருத்துக்களை சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், விரைவில் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இதனால், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வரும் சுதந்திர தினத்தன்று வெளியிட  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via