ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய   புதிய சட்டம் :- அமைச்சர் ரகுபதி

by Editor / 04-08-2021 03:37:09pm
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய   புதிய சட்டம் :- அமைச்சர் ரகுபதி

 

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்யும் வகையில் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்தியதாகவும், இதன் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தடை விதித்து அவசர கதியில் அதிமுக சட்டம் ஒன்றை நிறைவேற்றியதாகவும் தெரிவித்துள்ளார். 


ஆன்லைன் ரம்மி ஏன் தடை செய்யப்படுகிறது என்பதற்கான போதுமான காரணங்கள் இல்லை எனக்கூறி சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், புதிய சட்டம் கொண்டு வருவதற்குத் தடை ஏதுமில்லை என்று உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


இந்த தீர்ப்பு வந்த உடனே, தகுந்த காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு, எவ்வித தாமதமுமின்றி, புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் , தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என  அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via