ராமேஸ்வரத்தில் திமுக நிர்வாகி வீடு, உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

by Editor / 09-08-2021 06:51:58pm
ராமேஸ்வரத்தில் திமுக நிர்வாகி வீடு, உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை



ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த திமுக முக்கிய பிரமுகர் வில்லாயுதம் என்பவருக்கு சொந்தமான வீடு, தங்கும் விடுதி, மீன் கம்பெனி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில் வில்லாயுதத்தின் சொத்து மதிப்பு, வங்கி வைப்பு தொகை, அவரது தொழில் குறித்து விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் வில்லாயுதம். திமுக மாவட்ட மீனவர் அணி செயலாளராகவும் அப்பகுதியில் பிரபலமான தொழிலதிபராக இருந்து வருகிறார். இவர் அதிகமாக சொத்துகளை வாங்கி குவிதத்தாகவும் அதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என மத்திய அமலாக்கதுறைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து திங்கள்  காலை முதல் வில்லாயுதத்திற்கு சொந்தமான வீடு, தங்கும் விடுதி மற்றும் மீன் கம்பெனி உள்ளிட்ட இடங்களில் மத்திய அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நடத்திய சோதனையில் வில்லாயுதற்கு எப்படி வருமானம் வருகிறது, தற்போது அவருடைய சொத்து மதிப்பு என்ன உள்ளிட்டவற்றை சோதனை செய்து வருவதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொடர்ந்து அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சொத்து மதிப்பு குறித்து ஆவணங்கள், வங்கி பண பரிவர்த்தனை, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றிய அமலாக்கத் துறையினர் தொடர்ந்து அது குறித்து விசாரணை செய்து வருவதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 

Tags :

Share via