2025ல் காசநோய் இல்லாத இந்தியா; வெங்கையா நாயுடு நம்பிக்கை

by Admin / 10-08-2021 02:55:56pm
2025ல் காசநோய் இல்லாத இந்தியா; வெங்கையா நாயுடு நம்பிக்கை

புதுடில்லி: அனைவரும் கூட்டுசேர்ந்து முன்னெடுக்கும் கூட்டு முயற்சியே, 2025-ல் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் லட்சியத்தை அடைய வழிவகுக்கும் என துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார்.

லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுடன் இணைந்து பாராளுமன்றத்தில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: காசநோய் இல்லாத இந்தியா என்பது இந்தியாவின் நீண்ட கால நோக்கம். அது இன்னும் முற்றுப்பெறாமல் உள்ளது.

 அதற்கு எம்.பி.,க்கள் அவரவர் தொகுதியில் காசநோயை ஒழிப்பதற்கு தீவிர கவனம் செலுத்த வேண்டும். 2025-ல் காசநோயை ஒழிக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கத்தை, எம்.பி.,க்கள் மக்களிடம் சென்று பேரணிகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

.இந்தியாவில் 2000-ம் ஆண்டிலிருந்து காசநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை மூலமாக இதுவரை 6 கோடியே 30 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பல்வேறு சுகாதார திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தியதால் 1950-ல் மக்களின் சராசரி ஆயுள் 35 வயது என்ற நிலையில் இருந்து 69.4 என்ற நிலைக்கு தற்போது உயர்ந்துள்ளது.

 அனைவரும் கூட்டுசேர்ந்து முன்னெடுக்கும் கூட்டு முயற்சியே, 2025-ல் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்கும் லட்சியத்தை அடைய வழிவகுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags :

Share via