சுறா மீன் புட்டு செய்வது எப்படி?

by Admin / 11-08-2021 11:40:23am
சுறா மீன் புட்டு செய்வது எப்படி?

தேவை

பால் சுறா மீன் – 1/2 கிலோ

சிறிய வெங்காயம் – 1/4 கிலோ

பச்சை மிளகாய் – 4

மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தாளிக்க

செய்முறை

மீனை பெரிய, பெரிய துண்டுகளாக நறுக்கி லேசாக உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும். பின்பு தோல், எலும்பு நீக்கி தூள் செய்து கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும். பச்சைமிளகாய் இதில் சேர்த்து வதக்கவும். தூள் செய்து வைத்துள்ள மீனை இதில் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும். சூடாக பரிமாறவும்.

 

Tags :

Share via