பார்ஸி கோழிக்கறி செய்வது எப்படி?

by Admin / 12-08-2021 11:26:24am
பார்ஸி கோழிக்கறி செய்வது எப்படி?

தேவை

கோழிக்கறித் துண்டுகள் – 1 கிலோ

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 10 பல்

வரமிளகாய் – 10

சீரகம் – 1 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு – 1/2 கப்

பெரிய வெங்காயம் – 2

தக்காளி கெச்சப் – 3 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

இஞ்சி, பூண்டை நைஸாக அரைத்து கோழிக்கறியில் தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய், சீரகம் இவைகளை நைஸாக அரைத்துக் கொள்ளவும். முந்திரிப்பருப்பையும் நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். மிளகாய் விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கி கோழிக்கறியை சேர்க்கவும். இதனுடன் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். கறி வெந்ததும் முந்திரிப்பருப்பு விழுது, தக்காளி கெச்சப் சர்க்கரை இவற்றை சேர்த்துக் கிளறவும். இக்கலவை கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறி இறக்கவும்.

 

Tags :

Share via