முட்டை பொரியல் செய்வது எப்படி?

by Admin / 13-08-2021 11:44:52am
முட்டை பொரியல் செய்வது எப்படி?

தேவை

முட்டை – 2

வெண்டைக்காய் – 1/2 கிலோ

சிறிய வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் – 4

கடுகு, உளுந்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்

மிளகு, சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையானது

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

      முட்டையை உடைத்து அதனுடன் மிளகு, சீரக, மஞ்சள்தூள் லேசாக உப்பு சேர்த்து அடித்து வைக்கவும். வெங்காயம், வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், ப.மிளகாய், வெண்டைக்காய், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து சூருள வதக்கவும். அடுத்து, முட்டைக்கலவையை இதில் ஊற்றி நன்றாக கிளறி இறக்கி விடவும். சூடாக பரிமாறவும்

 

Tags :

Share via