மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

by Staff / 14-08-2024 05:31:53pm
மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகப்பட்டினம் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் இன்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 4 மீனவர்கள் சென்ற படகில் ஏறிய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். மேலும், ரூ.5 லட்சம் மதிப்பிலான 700 கிலோ மீன்பிடி வலைகளை பறித்துவிட்டு விரட்டி அடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.

 

Tags :

Share via