“மிகப்பெரிய நன்றி கமல் அண்ணா” - சூர்யா பதிவு

by Staff / 02-09-2024 03:18:36pm
“மிகப்பெரிய நன்றி கமல் அண்ணா” - சூர்யா பதிவு

பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மெய்யழகன்'. இந்தப் படம் வருகிற 27ம் தேதி ரிலீஸாகவுள்ளது. சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் 'யாரோ இவன் யாரோ', 'போறேன் நான் போறேன்' ஆகிய இரண்டு பாடல்களை கமல்ஹாசன் பாடியிருக்கிறார். இதுகுறித்து சூர்யா தனது ‘X’ தளத்தில், "மெய்யழகன் படத்தின் பாடலுக்கு உங்களுடைய தனித்துவமான குரலைக் கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி கமல் அண்ணா” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via