ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து; 3 பேர் மாயம்
மீட்புப் பணிக்காக சென்ற கடலோர பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் காணாமல் போயுள்ளனர். ஹரி லீலா என்ற கப்பலில் வைத்து காயமடைந்த ஊழியரை கரைக்கு கொண்டு வர சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. கடலில் விழுந்த ஹெலிகாப்டரில் பயணித்த ஒரு ஊழியர் காப்பாற்றப்பட்டார். காணாமல் போன 3 பேரையும் கண்டுபிடிக்க 4 கப்பல்கள் மற்றும் 2 கண்காணிப்பு விமானங்களுடன் மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags :