சிறையில் இருந்த தப்ப முயன்ற 129 கைதிகள் பலி

by Staff / 03-09-2024 02:47:19pm
சிறையில் இருந்த தப்ப முயன்ற 129 கைதிகள் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தலைநகர் கின்ஷாசா அருகே மகலா என்ற பகுதியில் சிறைச்சாலை உள்ளது. 1500 கைதிகள் அடங்கும் இந்த சிறைச்சாலையில் 12 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சிறைச்சாலையில் நேற்று (ஆகஸ்ட் 2) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக்கிக்கொண்டு பல்வேறு கைதிகள் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். அப்போது கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுத்திணறல், மேலும் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிசூடு ஆகியவற்றில் 129 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

 

Tags :

Share via