12 கோவில்களிலும் சிவன் லிங்கம்.- திருமாலுக்குரிய 12 சிறப்புப் பெயர்கள்.

by Admin / 28-09-2024 12:54:01am
 12 கோவில்களிலும் சிவன் லிங்கம்.- திருமாலுக்குரிய 12 சிறப்புப் பெயர்கள்.

 இந்து வழிபாட்டில் சிவனாகிய ஆதி புருஷனின் வழிபாடு  தொன்மை காலத்தில் இருந்து .. இந்திய நெடும்பரப்பு முழுவதும் சிவனின் வழிபாடு லிங்க வழிபாடாக வழிபட்டு வந்த நிலை இன்று வரைக்கும் நீடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் தேசம் கடந்தும் சிவ-சக்தி வழிபாடு கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

 சிவன் வழிபாட்டில் 12 சிவன் கோயில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. 12 என்று சொல்கிற இந்த எண் ஆனது துவா என்றால் இரண்டு என்றும் தசம் என்றால் பத்து என்றும் இரண்டையும் சேர்த்து பன்னிரண்டு சிவ தலங்களை வழி விடுகிறவர்களின் பாவங்கள் எல்லாம் நீக்கப்பட்டு... புண்ணிய நிலையை அடைவார்கள் என்று இந்து மத நூல்கள் செல்கின்றன.

சிவன் வழிபாட்டை போலவே ,பெருமாள் வழிபாட்டிலும் இந்த 12 எண் முக்கியத்துவம் வாய்ந்தது. எப்படி எனில் வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில்: நாமம் இடுவதை துவாதச நாமம்   என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் பெருமாள் பன்னிரண்டு இடங்களில் காத்து நின்று அவர்களை வாழ வைக்கிறார் என்கிற பொருள்படும் விதமாக இந்த முறையை அவர்கள் கையாளுகிறார்கள்.

1. சோமநாதர் ஆலயம் பிரபாஷத்திரம் துவாரகை அருகில் அமைந்துள்ளது

2. மல்லிகார்ஜுனர் ஆலயம் ஆந்திர பிரதேசம் ஸ்ரீ சைலத்தில் அமைந்துள்ளது.

3. மா காலேஸ்வரர், உஜ்ஜயினி சிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ள ஆலயம்.

: 4. ஓங்காரேஸ்வரர், நர்மதை நதிக்கரை காண்டவா அருகில் உஜ்ஜைனி.

: 5. வைத்திய நாதர், பீகார் , பரவி

: 6. பீம் சங்கரர், மகாராஷ்டிரா பீமா நதிக்கரையில் அமைந்துள்ள ஆலயம்.

 7. ராமேஸ்வரம்.

 8. நாகேஸ்வரர், தாருகா வனம் கோமதி துவாரகாவிலிருந்து, குஜராத் மாநிலம்.

9. விஸ்வநாதர், காசி ,உத்திர பிரதேசம்

10. திரையம் பகேஸ்வர், பிரம்மகிரி கோதாவரி அருகில் அமைந்துள்ள ஆலயம்.

11. கேதாரேஸ்வரர், விகி ரிஷிகேசத்திலிருந்துகேதர்நாத். ..

 12. கிருஷ்ணேஸ்வரர், ஆந்திர பிரதேசம் , தவுல தா பாத்.

 இந்தப் 12 கோவில்களிலும் சிவன் லிங்கமாகவே பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுவதால் இது ஆதி காலத்து கோவில்கள் என்று கொள்ளலாம்.

 இந்து மத வழிபாட்டில் பன்னிரண்டு எண் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பாருங்கள்..

சிவனின் பன்னிரண்டு சிவத்தலங்களை குறிப்பது போன்று திருமாலுக்குரிய 12 சிறப்பு பெயர்களாக கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு ,மதுசூதனன்,  விக்ரமன், வாமனன்,ஸ்ரீதரன், ஹரிசி கேசன், பத்மநாபன், தாமோதரன் என்கிற 12 பெயர்களும் துவா தச நாமும் என்று அழைக்கப்படுகிறது. வைணவ வழிபாடு மேற்கொள்ளும் பக்தர்கள் தங்கள் உடம்புகளில் 12 இடங்களில் துவா தச நாமத்தை இட்டுக் கொள்வர். உடலில் நெற்றி நடு வயிறு நடு மார்பு நடுக்களுக்கு வலது மார்பு வலது கை வலது தோல் இடது மார்பு இடது கை இடது தோல் பின்புறம் அடி முதுகு பின்புறம் பிடரி ஆகிய பாகங்களில் நாமும் இட்டுக் கொள்வர்.

 

 12 கோவில்களிலும் சிவன் லிங்கம்.- திருமாலுக்குரிய 12 சிறப்புப் பெயர்கள்.
 

Tags :

Share via