ரயில் பயண சீட்டு விற்பனையில் க்யூ ஆர் கோடு பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு
மதுரை கோட்டத்தில் 11 ரயில் நிலையங்களில் உள்ள 151 பயணச்சீட்டு விற்பனை சாளரங்களில் பணப் பரிவர்த்தனைக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் க்யூ ஆர் கோடு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அறிமுகப்படுத்தப்பட்ட ஆகஸ்ட் மாத மொத்த வருமானத்தில் 1.76 சதவீதம் கியூ ஆர் கோடு மூலம் பண பரிவர்த்தனை நடைபெற்றிருந்தது. இது செப்டம்பர் மாத கடைசியில் 5.70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த புதிய பண பரிவர்த்தன முறை பணமில்லா மின்னணு பணப்பரிமாற்றத்திற்கு வழிகோலுகிறது. பயண சீட்டுக்கு பணம் செலுத்துதல், அதற்கு பிறகு மீதி சில்லரை வாங்குதல் போன்றவை இல்லாமல் எளிதாக, விரைவாக பயணச்சீட்டு வாங்க முடிகிறது. பயணச்சீட்டு அலுவலகம் முன்பு காத்திருக்கும் நேரமும் குறைகிறது. இந்த நடைமுறை 27 பயண சீட்டு முன்பதிவு மையங்கள், 67 முன்பதிவில்லாத பயண சீட்டு விற்பனை மையங்கள், 57 ஒருங்கிணைந்த முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு விற்பனை மையங்கள் ஆகியவற்றில் அமுலில் உள்ளது. இந்த நடைமுறையை பயன்படுத்தி முன்பதிவு பயண சீட்டுகள், முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள், மாதாந்திர மற்றும் காலாண்டு சீசன் டிக்கெட்டுகள், நடைமேடை அனுமதி சீட்டுகள் ஆகியவற்றை பெறலாம். இந்தக் கியூ ஆர் கோடு பண பரிவர்த்தனை முறை 22 ரயில் நிலையங்களில் உள்ள 49 தானியங்கி பயண சீட்டு வழங்கும் இயந்திரங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. பயணிகளின் வசதிக்காக தூத்துக்குடி, திருச்செந்தூர், சிவகாசி ஆகிய ரயில் நிலையங்களில் கூடுதலாக மேலும் ஒரு தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம் நிறுவப்பட உள்ளது அதேபோல ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இரண்டு தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன.
Tags : ரயில் பயண சீட்டு விற்பனையில் க்யூ ஆர் கோடு பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு