சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசியது ஏன்?, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர், அதன்முடிவு வருவதற்கு முன்பே பொதுவெளியில் பேசியது ஏன்? என உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் நீதிபதி கவாய் அறிவுறுத்தியுள்ளார்.
Tags : திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்