மின் இணைப்பு கொடுப்பதற்கு ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளர் போர் மேன் கைது.
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவுக்கு உட்பட்ட தெற்கு சத்திரத்தைச் சேர்ந்த வண்டிக்கார மாரிமுத்து என்பவர் மகன் பேச்சியப்பன் நிலத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக சிவகிரி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்துள்ளார்.போர் மேன் மருதுபாண்டி என்பவருடன் சிவகிரி உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் சம்பந்தப்பட்ட இடத்தை பார்த்துவிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க கூறியுள்ளார்.30 ஆம் தேதி நேற்று ,வண்டிக்காரன் மாரிமுத்துவை தொடர்பு கொண்டஉதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் மின் கட்டணமாக 16 ஆயிரத்து 499 ரூபாய் கொடுத்து விடுங்கள். மின் இணைப்பு கொடுப்பதற்கு எனக்கும் போர் மேனனுக்கும் சேர்த்து 35 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என வண்டிக்காரன் மாரிமுத்து கூறியதை அடுத்து முதல் தவணையாக 5000 ரூபாய் முதலில் கொடுக்க வேண்டும் என உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் கரராகச் சொல்லி விட்டதால், தென்காசி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் வண்டிக்காரன் மாரிமுத்து புகார் அளித்தார்.இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ஐயாயிரம் ரூபாய் பணத்தை இன்று உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் லஞ்சமாகப் பெற்றபோது மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தர் தலைமையிலான போலீசார் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் மற்றும் அவரது உடன் இருந்த போர் மேன் மருது பாண்டியும் ஆகியோரையும் கைது செய்தனர்.
Tags : மின் இணைப்பு கொடுப்பதற்கு ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளர் போர் மேன் கைது.