ராஜ்யசபாவில் அமளி; எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் வலியுறுத்தல்

by Editor / 16-08-2021 09:47:21am
ராஜ்யசபாவில் அமளி; எம்.பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் வலியுறுத்தல்

 ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு 7 யூனியன் அமைச்சர்கள் கடிதம் ஒன்றை அளித்துள்ளனர்.பியூஸ் கோயல், பிரகலாத் ஜோஷி, முக்தார் அப்பாஸ் நக்வி, தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், அர்ஜுன் ராம் மேக்வால், பி முரளிதரன் ஆகிய ஏழு யூனியன் அமைச்சர்களும் வெங்கையா நாயுடுவை சந்தித்துப் பேசினர்.

முன்னதாக அரசு முதலீட்டாளர்கள் இடையே அதிக அளவு தனியார் முதலீட்டாளர்கள் பங்கு கொள்ள அனுமதி அளிக்கும் மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட இருந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் அவைத்தலைவர் காவலர்களிடம் அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். பெண் எம்பிக்கள் பலர் காவலர்களால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தனர்.ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆளுங்கட்சி எம்பிகள் மறுத்துள்ளனர்.

மேலும் பெண் காவலர்கள் பலர் பெண் எம்பிகளை தாக்கப்பட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபை நாகரிகம் இன்றி ராஜ்யசபாவில் தள்ளுமுள்ளு மற்றும் வாய்த் தகராறில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பி.,க்கள்மீது நடவடிக்கை எடுக்க ராஜ சபா தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு ஏழு யூனியன் அமைச்சர்கள் இந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via