மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

by Admin / 16-08-2021 12:01:48pm
மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

தேவை

பிரியாணி அரிசி – 250 கிராம்

நெய் – 100 கிராம்

பெரிய வெங்காயம் – தேவையான அளவு

பச்சை மிளகாய் – சிறிதளவு

வறுத்த மல்லி – 2 டீஸ்பூன்

மட்டன் – 250 கிராம்

தேங்காய் – 1/2 முடி

கொத்தமல்லி தழை – சிறிதளவு

பெரிய சீரகம் – 1 டீஸ்பூன்

கிராம்பு, ஏலம், பட்டை, நெய்யில் வறுத்து வைக்கவும்.

செய்முறை

அரிசியை சுத்தம் செய்து வடிகட்டி வைக்கவும். குக்கரில் வெட்டிய கறித்துண்டுகளை உப்பு, மஞ்சள் 700 கிராம் நீர் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி வெட்டிய வெங்காயம், புதினா, இலை சேர்த்து வதக்கவும். அவித்த கறி, அரைத்த மசால், அரிசியையும் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும். குக்கரில் கறி வைத்து தண்ணீர் தேங்காய் பால் சேர்த்து அரை படியாக கொதிக்க வைக்கவும். தேங்காய் பாலில் வதக்கிய மசால் அரிசி, கறி சிறிது உப்பும் சேர்த்து கிளறி இளந்தீயில் குக்கரை மூடி 10 நிமிடத்தில் இறக்கவும். பிரியாணி தம் கட்டி சூடாக வைத்து பரிமாறவும்.

 

Tags :

Share via