3வது அலை  எப்போது வரும்?.. எய்ம்ஸ் இயக்குநர் 

by Editor / 16-08-2021 05:08:42pm
3வது அலை  எப்போது வரும்?.. எய்ம்ஸ் இயக்குநர் 

 


இந்தியாவில் 3வது அலை பரவல் எப்படி இருக்கும், அதன் தாக்கம் எத்தகையது என்று புது தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 2வது அலை படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது.. நேற்று புதிதாக 33,212 கொரோனா கேஸ் உறுதியாகி உள்ளது.. 35,497 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர்... 421 பேர் உயிரிழந்துள்ளனர்..


இப்படிப்பட்ட சூழலில் 3வது அலை வரும் என்ற எச்சரிக்கைகள் கிடைத்து வருகின்றன. இதுதொடர்பாக எய்ம்ஸ் டைரக்டர் ரந்தீப் குலேரியா 3வது அலை பரவல் குறித்து அவ்வப்போது அலர்ட் செய்தும் வருகிறார். 


"நாம் ஏற்கனவே கடந்த காலத்தில் ஏற்பட்ட தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை.. அதனால் வரப்போகும் மூன்றாம் அலையை ஒரேயடியாக தவிர்க்க முடியாது.. அது 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவை தாக்கும் என்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குநர் ரந்தீப் குலேரியா கடந்த மாதமே தெரிவித்திருந்தார். 


அந்தவகையில் இப்போது ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், அவர் சொல்லும்போது, "இந்தியாவில் 3வது அலை ஏற்பட வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது... இருந்தாலும், தொற்று கட்டுப்பாடுகளை எந்தளவிற்கு பின்பற்றுகிறோம் என்பதை பொறுத்துதான் அதன் தாக்கம் அமையும்... ஆனால், 2வது அலையை போல் அந்த அளவுக்கு வீர்யம் இருக்காது என்றே நினைக்கிறேன்.. ஆனால், தடுப்பூசி போடாத காரணத்தால் குழந்தைகள் அதிக அளவில் கொரோனா பாதிப்பிற்கு ஆளாக வாய்ப்புள்ளது. 


நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. இந்த ஆகஸ்ட் மாதத்தில் முதல் 10 நாட்களில் பெங்களூருவில் மட்டும் 543 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. அதில் 0-9 வயதுக்கு உட்பட்டவர்கள் 88 பேர், 10-19 வயதுக்கு உட்பட்டவர்கள் 305 பேர் என்று தெரிய வந்துள்ளது... அதிலும் கடைசி 5 நாட்களில் மட்டும் 499 குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது... இதுதான் மிகுந்த கவலையையும் பெங்களூருவில் ஏற்படுத்தி உள்ளது. 


எப்படியும், அடுத்த ஓரிரு மாசத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் கிடைத்துவிடும்.. அதுக்குப்பிறகு, தடுப்பூசி போட்டுக் கொள்ள நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும்.. எல்லா வயதினரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும்... இதனால் மோசமான பாதிப்புகள் எதுவும் வராது.. ஒருவேளை 3வது அலை வந்தாலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே தெரிகிறது" என்றார்.

 

Tags :

Share via