டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் மதுபிரியர்கள் கூட்டம்

by Editor / 30-10-2024 10:21:38am
டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் மதுபிரியர்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பூர் மாநகரில் பணியாற்றும் பனியன் தொழிலாளர்கள் போனஸ் பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். பெரும்பாலான நிறுவனங்களில் நேற்றிரவு 8 மணிக்கு பணியாளர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் மதுபானம் வாங்க குவிந்தனர். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இதே நிலைதான் நீடிக்கிறது.

 

Tags : டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் மதுபிரியர்கள் கூட்டம்.

Share via