திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பக்தர்கள் மகிழ்ச்சி

by Editor / 30-10-2024 10:34:29am
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பக்தர்கள் மகிழ்ச்சி

 

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோவிலில் தினந்தோறும் மாலை 6 மணி அளவில் தங்கத்தேர் பிரகாரம் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் இந்த கோவிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணிகள் தமிழக முதல்வரால் 28.09.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.இதற்கிடையில் கோவிலில் பெருந்திட்ட வளாகப்பணிகளில் வடக்கு மற்றும் கிழக்கு கிரிப் பிரகார தரைத்தளம் பணிகள் நடைபெற உள்ளது என்றும் இதனால் கடந்த 17.07.2024 ஆம் தேதி முதல் தினந்தோறும் மாலை 6 மணி அளவில் பிரகாரத்தை சுற்றி வரும் தங்கத்தேர் வருவது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளதால் பக்தர்களின் கோரிக்கை ஏற்று வருகின்ற 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதிவரை தினமும் மாலையில் தங்கத்தேர் கிரிபிரகாரத்தை சுற்றி வரும் என்று கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற உள்ளது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கந்தசஷ்டி விழா நிறைவடைந்த பின்னர் தெற்கு மற்றும் மேற்கு கிரிப்பிரகாரத்தில் பணிகள் நடைபெற உள்ளது. எனவே கந்த சஷ்டி விழா காலங்களில் மட்டும் புறப்பாடு நடைபெறும் என்றும், அதன்பின்னர் பெருந்திட்ட வளாகப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் மீண்டும் தங்கத்தேர் புறப்பாடு தொடங்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மீண்டும் தங்கத்தேர் பக்தர்கள் மகிழ்ச்சி

Share via