அமெரிக்க ஓபன் - ஆன்டி முர்ரேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

by Admin / 31-08-2021 04:33:37pm
அமெரிக்க ஓபன் - ஆன்டி முர்ரேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்


   
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பிரிட்டனை சேர்ந்த ஆன்டி முர்ரே, கிரீசை சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாசுடன் மோதினார்.

முதல் செட்டை முர்ரே 6-2 என கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது செட்டை சிட்சிபாஸ் 7-6 என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட முர்ரே மூன்றாவது செட்டை 6-3 என கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சிட்சிபாஸ் நான்காவது மற்று,ம் ஐந்தாவது செட்டை 6-3, 6-4 என வென்றார்.

 

Tags :

Share via