செட்டிநாடு பால் பணியாரம்

by Writer / 01-09-2021 08:01:08pm
செட்டிநாடு பால் பணியாரம்

தேவையான பொருட்கள் :

பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப்,

பால் - அரை லிட்டர்

திக்கான தேங்காய் பால் - ஒரு டம்ளர்

சர்க்கரை - ஒரு கப்

ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - ஒரு சிட்டிகை

பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்து எடுத்து கொள்ளவும். இதில் மாவு கெட்டியாக இருக்க வேண்டும். அத்துடன் பாலைக் காய்ச்சி இறக்கி சிறிது ஆற விட வேண்டும். அத்துடன் தேங்காய் பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

பின்னர் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் பொரித்தெடுத்து, இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும். அதன் பிறகு பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் போட்டு 10 நிமிடம் கழித்து பரிமாறவும்

 

Tags :

Share via