தான் படித்த பள்ளி.. வகுப்பறையில் அமர்ந்த உதயநிதி

by Editor / 02-09-2021 10:21:03am
தான் படித்த பள்ளி.. வகுப்பறையில் அமர்ந்த உதயநிதி

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், டான்பாஸ்கோ பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷுடன் உதயநிதி ஆய்வு செய்தார். அப்போது தான் படித்த டான்பாஸ்கோ பள்ளியின் வகுப்பறையில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்

தமிழ்நாட்டில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்பறைக்குச் சென்றனர்.இந்நிலையில் ,டான்பாஸ்கோ பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷுடன் ஆய்வு செய்த உதயநிதி தான் படித்த வகுப்பறையில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.இது குறித்து உதயநிதி தனது ட்விட்டரில், "பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தோம். நான் அன்று பாடம் பயின்ற அதே வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தன. என் ஆசிரியர்களுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். 

 

Tags :

Share via