ஸ்ரீராம நவமி, சித்ரா பவுர்ணமி, அட்சய திருதியை, முக்கிய பண்டிகை நாட்கள்

by Editor / 24-07-2021 02:05:20pm
ஸ்ரீராம நவமி, சித்ரா பவுர்ணமி, அட்சய திருதியை,  முக்கிய பண்டிகை நாட்கள்

சித்திரை மாதத்தில் தெய்வீக அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. ஸ்ரீராமர் அவதாரம் நிகழ்ந்தது இந்த மாதத்தில்தான். திருமாலின் நரசிம்ஹ அவதாரம், பரசுராமன் அவதாரம் நிகழ்ந்ததும் இந்த மாதத்தில்தான். சித்ரா பவுர்ணமி, அட்சய திருதியை எந்தெந்த நாட்களில் என்னென்ன விஷேச நாட்கள் வருகிறது என உங்கள் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

சித்திரை மாதத்தில்தான் மகான்கள் அவதரித்துள்ளனர். சித்திரையில் சித்ர குப்தன் பிறந்துள்ளார். சித்திரை மாத, சித்திரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றினாராம். சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன. 

சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்வதால் அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு. சொக்கநாதர்- மீனாட்சியைத் திருக் கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரையில் சித்திரை மாதத்தில் நடைபெறுகிறது. கள்ளழகர் விழாவும் மதுரையில் சித்ரா பௌர்ணமியன்று சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. 


சித்திரை 10ஆம் நாள் ஏப்ரல் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை சர்வ காமத ஏகாதசி இன்று வீடு கட்ட வாஸ்து பூஜை செய்யலாம். சித்திரை 13 ஏப்ரல் 26 திங்கட்கிழமை சித்ரா பவுர்ணமி இன்று மாலை சத்யநாராயணா பூஜை செய்ய ஏற்ற நாள். நினைத்த காரியம் கை கூடும். சித்திரை 14 ஏப்ரல் 27 செவ்வாய்கிழமை சித்ர குப்த பூஜை செய்யலாம். நோட்டு பேனா வாங்கி தானம் கொடுக்கலாம். சித்திரை 17 ஏப்ரல் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி விநாயகர் வழிபாடு செய்ய உகந்த நாள்.

சித்திரை 18 ஏப்ரல் 1 ஆம் தேதி சனிக்கிழமை வராஹ ஜெயந்தி. சித்திரை 21 மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பம். சித்திரை 24 மே 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை பாப விமோசினி ஏகாதசி சித்திரை 26 மே 9ஆம் தேதி ஞாயிறு கிழமை மிருத்யுஞ்ச பிரதோஷம். மத்ஸ்ய ஜெயந்தி. சித்திரை 28 மே 11ஆம் தேதி செவ்வாய்கிழமை சர்வ அமாவாசை சித்திரை 29 மே 12ஆம் தேதி வைசாக ஸ்நானம் ஆரம்பம். 30 நாட்கள் புனித நீராடவும் தோஷ பரிகாரம் செய்யவும் ஏற்ற காலமாகும். சித்திரை 31 மே 14 வெள்ளிக்கிழமை அட்சய திருதியை தங்கம், வெள்ளி வாங்க நல்ல நாள். நீர் மோர், விசிறி தானம் செய்யலாம். கௌரி பூஜை செய்ய ஏற்ற நாள். ராஜ மாதங்கி ஜெயந்தி.

ஸ்ரீராம நவமி, சித்ரா பவுர்ணமி, அட்சய திருதியை,  முக்கிய பண்டிகை நாட்கள்
 

Tags :

Share via