வணிகவரியில் ஏமாற்றினால் குண்டர் சட்டம்! அமைச்சர் மூர்த்தி

by Editor / 07-09-2021 09:41:21am
வணிகவரியில் ஏமாற்றினால் குண்டர் சட்டம்! அமைச்சர் மூர்த்தி

சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை மீதான மானியக் கோரிக்கையில் பதிலளித்து பேசிய அமைச்சர் மூர்த்தி , வணிகர் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளுடன் கூடுதலாக திருமண உதவித்தொகை மற்றும் விபத்துக் கால இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் எனத் 
தெரிவித்தார் .

வணிக நல வாரியம் பெயரில் போலி பட்டியல் தயாரிப்பவர்களின் மீது குண்டர் சட்டம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.வணிவரி துறையில் 7 புதிய நிர்வாகக் கோட்டம் அமைக்கப்படும் எனவும், வணிக வரி விஷயத்தில் ஏமாற்றுபவர்களை உரிய தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய ரோந்து வாகனங்கள் மூலம் சரக்கு வணிக போக்குவரத்தினை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கண்காணிப்பை மேம்படுத்துவதற்காக இணைய நெறிமுறை புகைப்படக் கருவிகள் 5.98 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்வி.கள் வழங்கப்படும் எனவும், வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட குக்கிராமங்கள் ஒரே சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் அமையும் வகையில் சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via