ஓய்வூதியம் ரூ. 25,000-ஆக உயர்வு- முதல்வர் ஸ்டாலின்

by Editor / 09-09-2021 05:20:05pm
ஓய்வூதியம் ரூ. 25,000-ஆக உயர்வு- முதல்வர் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின் " பாஜக சட்டமன்ற உறுப்பினர் பேசிய போது முன்னாள் எம்.எல்.ஏக்களின் ஓய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.. ஆனால் ஏற்கனவே இந்த தொகை ரூ. 20,000-ல் இருந்து 25,000-ஆக உயர்த்தப்பட்டது.. ஆனால் அது வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டது.. அதற்கு முறைப்படி சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றி இருக்க வேண்டும்.. ஆனால் கடந்த ஆட்சி அதை செய்யவில்லை..ஆனால் இப்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு இன்னும் ஒருநாள் தான் சட்டப்பேரவை நடைபெற உள்ளது.. வரும் திங்கள்கிழமையுடன் இந்த கூட்டத்தொடர் நிறைவடைய உள்ளது.. எனவே வரும் திங்கள் கிழமை அன்று, முன்னாள் எம்.எல்.ஏக்களின் ஓய்வூதியத்தை ரூ.25,000-ஆக உயர்த்தி வழங்கிடும் வகையில் சட்ட முன்வடிவை கொண்டு வந்து நிறைவேற்ற உள்ளோம்.." என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via