அநீதியான தேர்வு. கமல் விமர்சனம்

by Editor / 12-09-2021 11:19:19am
அநீதியான தேர்வு.  கமல் விமர்சனம்

ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த தேர்வை ரத்து செய்யஅரசியல் பிரபலங்கள் முதல் மாணவர்கள் வரை அனைவருமே கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று இந்தியா முழுவதும் 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் மட்டும் இந்த நீட் தேர்வை 1,10,921 எழுதுகின்றனர். இதில் 40,376 மாணவர்களும், 70,594 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவரும் எழுதுகின்றனர்.இன்று நடைபெறும் நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?' என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via