டில்லியில் 57 ஆண்டுகளில் இல்லாத மழை

by Editor / 17-09-2021 06:44:24pm
டில்லியில் 57 ஆண்டுகளில் இல்லாத மழை

நடப்பாண்டு பருவமழைக் காலத்தில் அதிகப்படியான மழைப்பொழிவை டில்லி சந்தித்துள்ளது. கடந்த ஜூன் 1ம் தேதி முதல் செப்., 16ம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் 1,170.7 மி.மீ., மழைப்பொழிவை டில்லி பெற்றுள்ளது. இது கடந்த 57 ஆண்டுகள் இல்லாத அளவு பதிவான அதிகபட்ச மழைப்பொழிவாகும்.கடந்த 1964ம் ஆண்டு இதே பருவமழை காலத்தில் டில்லியில் 1,190.9 மி.மீ., மழைப்பொழிவைப் பெற்றிருந்தது. 1933ம் ஆண்டு பருவமழை காலத்தில் 1,420.3 மி.மீ., மழையும், 1964ம் ஆண்டு 1,190.9 மி.மீ., மழையும் இதுவரை பதிவான அதிகபட்ச மழை அளவாகும்.நடப்பாண்டு பருவமழை காலத்தில் பதிவான மழைப்பொழிவின் அளவானது 3வது அதிகபட்ச மழைப்பொழிவு. டில்லியில் செப்., மாத மழை பதிவு 400 மி.மீ., குறியீட்டை கடந்திருக்கிறது. நேற்று வரையிலான 403 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. டில்லியில் மேலும் ஆறு நாட்களுக்கு கன மழை பெய்ய உள்ளது. இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via