மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படலாம்!".. பிரிட்டன் அரசு எச்சரிக்கை

by Editor / 18-09-2021 12:39:59pm
மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படலாம்!

பிரிட்டன் அமைச்சர், பிற நாட்டிலிருந்து உருமாற்றம் அடைந்த கொரோனா பரவினால் மீண்டும் நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் சுற்றுச்சூழல் செயலாளரான George Eustice தெரிவித்துள்ளதாவது, இன்று அமைச்சர்கள் ஆலோசனை செய்து பயண கட்டுப்பாடுகளை மாற்றுவது குறித்து, தீர்மானிப்பார்கள். இப்போது வரை நடைமுறையில் இருக்கும் கடும் கட்டுப்பாடுகள் தான் உருமாற்றம் அடைந்த தொற்றிலிருந்து நமக்கு அதிக பாதுகாப்பை அளித்திருக்கின்றன.

போக்குவரத்து துறைக்கு இது மிகவும் கடினமான சூழலாக இருக்கிறது. நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். எனவே தான் சில விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முடிந்த அளவிற்கு விரைவில் கட்டுப்பாடுகள் குறைக்கப்படும். கட்டுப்படுத்த முடியாத கொரோனா மாறுபாடு பிரிட்டனில் பரவி விடும் என்பது தான் போக்குவரத்து துறைக்கு இருக்கும் அதிகமான அச்சுறுத்தல்.

அவ்வாறு நாட்டில் உருமாற்றம் அடைந்த கொரோனா பரவி விட்டால் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். அதை நாங்கள் விரும்பாததால் தான் முன்கூட்டியே எச்சரிக்கையாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். ஏனென்றால் நாங்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் மீண்டும் பெற முடியாத வகையில் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via