ஆஸ்திரேலியாவில் ஊரடங்குக்கு எதிராக திரண்ட மக்கள்

by Editor / 18-09-2021 07:36:21pm
ஆஸ்திரேலியாவில் ஊரடங்குக்கு எதிராக திரண்ட மக்கள்

ஆஸ்திரேலியாவில் கரோனா ஊரடங்குக்கு எதிராக திரண்ட மக்களைக் கட்டுப்படுத்த போலீஸார் பெப்பர் ஸ்ப்ரே அடித்தனர். மேலும் நூற்றுக் கணக்கானோரை கைது செய்தனர். இந்தப் போராட்டத்தில் போலீஸார் பலரும் காயமடைந்தனர்.

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரம். இங்கு பல இடங்களிலும் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால், தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

சனிக்கிழமையான இன்றும் 500 பேருக்கு தொற்று உறுதியானதால் 6வது முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் விகோடோரியா நகரில் 700க்கும் மேற்பட்டோர் கரோனா ஊரடங்குக்கு எதிராகத் திரண்டனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. இதனையடுத்து போலீஸ் பெப்பர் ஸ்ப்ரே அடித்து கூட்டத்தை விரட்டியடித்தனர்.

காயம்மடைந்த 6 போலீஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

Tags :

Share via