1 முதல் 7ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு

by Editor / 19-09-2021 10:15:47am
1 முதல் 7ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பு

1 முதல் 7ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது .

கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது . பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது .

கூட்டத்தின் முடிவில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் , 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளை நவம்பர் 1 ஆம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது . மற்ற வகுப்புகளை நவம்பர் 15 ஆம் தேதி திறக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர் .

அடுத்த வருடம் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளனர் . பள்ளிகளை திறந்த உடன் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர் .

பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை இணைந்து மேற்கொண்டு வருகின்றனர் .

பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு சிறப்பு முகக்கவசங்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார் . இதுப்போன்ற முகக்கவசங்களை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு பள்ளி நிர்வாகித்திடம் கேட்டுக் கொண்டுள்ளார் .

 

Tags :

Share via