உத்தர பிரதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு, வைரஸ் காய்ச்சல்

by Editor / 19-09-2021 10:42:15am
உத்தர பிரதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு, வைரஸ் காய்ச்சல்

உத்தர பிரதேசத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் சஞ்சய் காலா தெரிவித்து உள்ளார். ஏற்கனவே, நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், தற்போது வடமாநிலங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சலால் குழந்தைகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 250 க்கும் மேற்பட்டவர்களும், டெங்கு காய்ச்சலுக்கு 25 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 10 குழந்தைகள் டெங்குவால் பாதிப்படைந்துள்ளதாகவும், இவர்கள் தவிர சில மலேரியா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கான்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வரும், மருத்துவருமாகிய சஞ்சய் கலா தெரிவித்துள்ளார். மேலும், டெங்குவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via