சிறுகதை சொல்லும் சேதி - கருணாநிதி

by Editor / 19-09-2021 11:46:16am
சிறுகதை சொல்லும் சேதி  - கருணாநிதி

சிறுகதை சொல்லும் சேதி  - கருணாநிதி 

சிறுகதை என்பது மனித இனம், பேசத்தொடங்கிய காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்த மொழி வடிவம். சிந்தனையில் தோன்றிய ஒன்றைப் பற்றி அல்லது கண்ணால் பார்த்த ஒரு காட்சி அல்லது நிகழ்வைப் பற்றி, மற்றவர்களுக்கு எடுத்து விளக்கிச் சொல்லும்போது, அவரவர் நிலைக்கேற்பவும், அறிவு வளர்ச்சிக்கேற்பவும், விளக்குபவருக்கும், விளக்கத்தைக் கேட்பவருக்குமிடையே ஒரு பாலமாகப் பாவிக்கப்பட்டதுதான் சிறுகதை. இலக்கிய வடிவங்கள் அனைத்திலுமே சிறுகதை ஓர் அங்கமாக இருந்து வருகிறது. ஒரு படைப்பாளி, ஒன்றை எழுதிடச் சிந்திக்கும்போது, பாத்திரமாகவோ, காட்சியாகவோ, நிகழ்வாகவோ தான் சிந்திக்கிறான். அந்தச் சிந்தனை முதலில் சிறுகதை எனும் கட்டமைப்பைப் பெற்று, பின்னர் அதுவே - ஒரு விதை பலநூறு விதைகளுக்கு உள்ளடக்கமாக இருப்பதைப் போல - இலக்கிய வடிவங்களைப் பெறுகின்றன. 

உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கர் ஆலன் போ, ஓ ஹென்றி, இருவரையும் சிறுகதையின் தொடக்கப்புள்ளிகள் என்று சொல்கிறார்கள். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு முன்பு, சிறுகதைகளே இல்லையா என்றால், இருந்திருக்கின்றன. பேரிலக்கியமாகக் கருதப்படும் பைபிளில் ஏராளமான சிறுகதைகள் இருக்கின்றன. அண்ணல் நபிகள் நாயகம், சிறுகதைகள் மூலம் மக்களுக்கு ஏராளமான செய்திகளை உணர்த்தியிருக்கிறார். 

அறிஞர் அண்ணா அவர்கள் ஏராளமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். நானும் எழுதியிருக்கிறேன்.

 

Tags :

Share via