மெடிட்டரேனியன் உணவுமுறை பற்றி தெரியுமா?

by Editor / 23-09-2021 08:05:37pm
மெடிட்டரேனியன் உணவுமுறை பற்றி தெரியுமா?

 

வழக்கமான மெடிட்டரேனியன் டயட்டில், அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானிய பொருட்கள் அடங்கியிருக்கும்.


மெடிட்டரேனியன் டயட் (Mediterranean diet) உடல்நலத்திற்கு நல்லது என கேள்விப்பட்டிருப்பீர்கள். சமீபத்திய ஆய்வுகளின்படி, மனச்சோர்வை குறைக்க இந்த டயட் உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


வழக்கமான மெடிட்டரேனியன் டயட்டில், அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானிய பொருட்கள் அடங்கியிருக்கும். உதாரணமாக முழு தானிய பிரட், பாஸ்தா, கைக்குத்தல் அரிசி ஆகியவற்றை கூறலாம்.மிதமான அளவிலான மீன், வெள்ளை இறைச்சி மற்றும் சில பால் பொருட்களும் இதில் அடங்கும்.மெடிட்டரேனியன் டயட் உணவுமுறைபடி உணவு உட்கொள்வதால் இதய நோய்க்கு வழிவகுக்கும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்வது ஒரு முக்கியமான விஷயம்
ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். வெண்ணெய் ஒற்றை நிறைசெறிவிலி கொழுப்பு (monounsaturated fat) வகையை சேரும். இது, கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவும் என்கிறது அமெரிக்க மருத்துவ மேயோ கிளினிக்.


கொட்டைகள், விதைகள் மற்றும் எண்ணெய் மீன்களில் பல நிறைசெறிவிலி கொழுப்பு (polyunsaturated fats) இருக்கிறது.
உப்பு உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். உப்புக்கு பதிலாக மூலிகைகள் அல்லது மசாலா பொருட்களை பயன்படுத்தி ருசியை கொண்டு வரலாம்.


ஆட்டுக்கறி, பன்றிக்கறி, மாட்டுக்கறி போன்ற சிவப்பு இறைச்சிகள் உட்கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
வாரத்திற்கு இருமுறையாவது மீன் மற்றும் கோழிக்கறி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மிதமான அளவு சிவப்பு வைன் குடிக்கலாம்
நல்ல உடற்பயிற்சி செய்வது அவசியம்.
இப்படியாக பல நாடுகளில் மெடிட்டரேனியன் டயட் பின்பற்றப்படுகிறது.

 

Tags :

Share via