ஆனைப்புளி பெருக்கமரம் தெரியுமா ?

by Editor / 24-09-2021 04:45:36pm
ஆனைப்புளி பெருக்கமரம் தெரியுமா ?

பொந்தன்புளி அல்லது ஆனைப்புளி, பெருக்கமரம் என்றும் தமிழில் அழைக்கப்படும், இதன் அறிவியல் பெயர்- Adansonia digitata. இதனை ஆங்கிலத்தில் Baobab என்று அழைப்பர்கள்.


இது ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த பெருக்க மரம் ஆகும். குறிப்பாக சூடான உலர்ந்து காணப்படும் சகாராவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்கப் பகுதிகளில் உள்ள சவானாவில் காணப்படுகிறது. இம்மரங்கள் தமிழகம் மற்றும் இலங்கைக்கு குதிரை வணிகர்களாக வந்த அரேபியர்களின் மூலமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்து சேர்ந்தன. குதிரைகளுக்கு உணவாக அரேபியர்கள் பொந்தன்புளி மரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் கொட்டைகளை கொடுப்பார்கள். 


இம்மரத்தைக் கற்பக விருட்சம் என்பார்கள்."ஐந்தருக்களில் ஒன்று. தேவர்கள் பாற்கடல் கடைந்த காலத்தில் தோன்றியது. இது விருஷவுருப் போன்றது" என கற்பக விருட்சத்திற்கு விளக்கம் கொடுக்கிறது அபிதான சிந்தாமணி. அட, நம்ம ஊரிலும் கற்பக விருட்சமா? என ஆவலோடு எத்தனைப் பேர் இந்த மரத்தைப் பார்த்திருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் வடஇந்தியாவில் இருந்து இந்த வழியாக இரயிலில் வந்த சாதுக்கள் சிலர், இந்த மரத்தின் கீழ் சில மணி நேரம் தியானித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.


இந்த மரத்தின் அடித்தோற்றம் யானையின் வடிவத்தைக் கொண்டிருந்ததால் இதற்கு 'யானை மரம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. இம்மரத்தின் இலைகள் கீரையாகச் சமைத்து உண்ணக் கூடியதாகவும், கனிகள் சுவையான பானம் தரக்கூடியதாகவும் இருப்பதை பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த மைக்கேல் அடன்சன் என்னும் தாவரவியலாளர் கண்டார், ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரு நாளில் இரண்டுமுறை இந்த பானத்தை குடித்துவந்தார். இதனால் இவர் உடல் நலம் மேம்பட்டதாக நம்பினார். 


இம்மரத்தின் சிறப்பினை உணர்ந்து முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருக்கமரத்தை பார்வையிட்டு, அதன் சிறப்புகள் குறித்த கல்வெட்டினை திறந்து வைத்தார்.

 

Tags :

Share via