சீமானின் அம்மா தமிழச்சி-ஹெச். ராஜா

by Editor / 28-09-2021 12:19:39pm
சீமானின் அம்மா தமிழச்சி-ஹெச். ராஜா

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் சுப.வீரபாண்டியன் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா தெரிவித்திருக்கும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படம், ஹெச்.ராஜா, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோருக்கு நேற்று திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஹெச்.ராஜா கூறியதாவது:

இந்த படத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களின் காதல், செயற்கை கருத்தரிப்பு மையங்கள், எஸ்.சி., எஸ்.டி. வன்கொஇவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.டுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டுள்ளது.

இப்படம் கிறிஸ்தவர்களை பெருமைப்படுத்தி இருக்கிறது. கிறிஸ்தவர்களை இழிவுபடுத்தவில்லை.உங்க எல்லாருக்கும் தமிழ் முழுசா தெரியுமா? தமிழ் தெரியுமாங்கிறேன் நான்.. தமிழ் மொழி வாழ்கன்னு யார் யாரெல்லாம் சொல்றாங்களோ அவர்களுக்கு தமிழின் சிறப்பு தெரியுமா? இந்துவும் தமிழரும் வெவ்வேறுன்னு சொன்னது யாரு? இந்து இல்லைன்னா தமிழ் எங்கய்யா வந்தது? என்ன பேசுறீங்க எல்லாரும்? யூ ஆல் மீடியா பீப்பிள் பிரெஸ்ட்டிடியூட்ஸ். தமிழ் வேற இந்து வேறன்னு பேசக்கூடிய அளவுக்கு நீங்க வேணும்னே மத மாற்றத்துக்கு துணை போக வேண்டாம்னு உங்களை கேட்டுக்கிறேன். சீமானின் அம்மா முதலில் தமிழச்சியா? சொல்லுங்க சார்.. அந்தம்மா தமிழா? இல்லை. she is a மலையாளி.. அப்புறம் என்ன பேசுறீங்க? என்னை பீகாரிங்கிறான் ஒரு முட்டாள்... நான் பச்ச தஞ்சாவூரான்

 

Tags :

Share via