கூடலூர் அருகே எஸ்டேட் பகுதியில்  புலியை பிடிக்கும் பணி தீவிரம் 

by Editor / 29-09-2021 03:23:09pm
கூடலூர் அருகே எஸ்டேட் பகுதியில்  புலியை பிடிக்கும் பணி தீவிரம் 



நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாடு மேய்க்கச் சென்ற சந்திரன் என்பவரை புலி தாக்கிக் கொன்றது. அதைத்தொடர்ந்து புலியை பிடிக்க வலியுறுத்தி தேவர்சோலை பஜாரில் தொடர் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தை தொடர்ந்து வனத்துறை புலியை பிடிக்கும் நட வடிக்கையில் இறங்கியது. கூண்டு வைத்தும் மயக்க ஊசி செலுத்தியும் பிடித்து கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேலையில், புலி அங்கிருந்து மேபீல்டு எஸ்டேட் பகுதிக்குச் சென்றுவிட்டது. அங்கு ஒரு மாட்டையும் கொன்றுவிட்டது. இதையடுத்து வனத்துறை குழு மேபீல்டு பகுதிக்குச் சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.கேரளம் மாநிலத்திலிருந்து வல்லுநர் குழுவும் வந்து தமிழக வனத்துறையுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.கடந்த மூன்று நாள்களாக புலி இடத்தை மாற்றுவதால் மயக்க ஊசி செலுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். தொடர்ந்து மூன்று நாள்களாக புலியை பார்த்துள்ளனர்.
தற்போது மேபீல்டு எஸ்டேட் பகுதியில் உள்ள கற்பூர சோலையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த பகுதியை வனத்துறை கண்காணித்து வருகின்றனர்.

 

Tags :

Share via