மைசூரில் இருந்து திருச்சிக்கு  கடத்தி வரப்பட்ட 1800 கிலோ குட்கா பறிமுதல்

by Editor / 29-09-2021 05:21:35pm
மைசூரில் இருந்து திருச்சிக்கு  கடத்தி வரப்பட்ட 1800 கிலோ குட்கா பறிமுதல்



தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்துவரும் கடைகள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவிநகர் பகுதியில் கோட்டை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.


அப்போது கர்நாடக மாநில வாகனப்பதிவு எண் கொண்ட லோடு வேனை சோதனை செய்ததில், முட்டைகோஸ் மூட்டைகளுக்கு இடையே 64 மூட்டைகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட 1800 கிலோ குட்கா, பான்மசாலா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 30.50 லட்சம் என மதிப்பிடப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக குட்கா, பான்மசாலாவை கடத்திய, மைசூரை சேர்ந்த சோமு சேகர் (22), மனோஜ் குமார் (26) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கஞ்சாவிற்ற பணம் 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் கொடுத்த தகவலின் பேரில் கம்பரசம்பேட்டை கணபதி நகரை சேர்ந்த பாஸ்கர் (50), இவரது அண்ணன் முத்து (60), ஆகியோரிடம் காவல்நிலையத்தி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via