முகநூல் மூலம் 70 ஆண்டுகளுக்குப்பின்  தாயுடன் இணைந்த மகன்

by Editor / 30-09-2021 06:21:48pm
முகநூல் மூலம் 70 ஆண்டுகளுக்குப்பின்  தாயுடன் இணைந்த மகன்


 முகநூல் காட்சிப் பதிவால்70 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது தாயுடன்இணைந்து உள்ளார் வங்கதேசத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் .


அப்துல் குத்தூஸ் முன்ஸிக்கு 10 வயது இருந்தபோது அவர் வீட்டைவிட்டு வெளியேறினார் . மேற்கே உள்ள ராஜ்ஸஹி எனும் கிராமத்திற்குச் சென்றார் . ஆதர வற்று திரிந்த அவரை அந்த ஊரைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் தத் தெடுத்துக் கொண்டனர் .
ஆண்டுகள் பல கடந்துவிட்டன . குத்தூசுக்கு திருமணமாகி 2 மகன் கள் , 5 மகள்கள் இருக்கின்றனர் . ஆனால் , முதுமையை எட்டிய அவருக்கு தாய் , தந்தை , சொந்த ஊர் நினைவு வாட்டி வதைத்து .


இதனால் அவர் தனது நண் பர்களின் உதவியுடன் முகநூலில் காட்சிப் பதிவு ஒன்றைப் பதிவிட் டார் . அதில் , தான் தனது குடும் பத்தாரை மீண்டும் சந்திக்க விரும்பு வதாகத் தெரிவித்தார் . குத்தூசுக்கு அவருடையை சொந்த ஊர் பிரம் மன்பாரியா மற்றும் பெற்றோரின் பெயர் மட்டுமே நினைவில் இருந் தது . இந்நிலையில் குத்தூசின் வீடியோவைப் பார்த்த அவரது சொந்த ஊரைச் சேர்ந்த நபர் ஒருவர் குத்தூசைத் தொடர்பு கொண்டு அனைத்து விவரங் களையும் கூறினார் .குத்தூசின் தாயார் மங்கோலா நெஸ்ஸா இன்னும் உயிருடன் இருப்பதையும் அவர் தனது 100 வயதை நெருங்கிக் கொண்டிருப் பதையும் அந்த நபர் தெரிவித்தார் .


இதனால் , குத்தூஸ் தனது சொந்த ஊருக்குப் புறப்பட்டார் . 70 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தனது தாயை சந்தித்தார் . அவரது தாயார் மகனின் நெற்றியில் இருந்த தழும்பை சரிபார்த்து அவரது அடையாளத்தை உறுதி செய்தார் .தாயும் , மகனும் 70 ஆண்டுகளுக் குப் பின்னர் இணைந்த நெகிழ்ச்சி யான நிகழ்வைக் காண ஏராளமா னோர் திரண்டனர் .

 

Tags :

Share via