மோடி அறிவித்த ஜல் ஜீவன் திட்டம் தெரியுமா?

by Editor / 02-10-2021 04:46:42pm
மோடி அறிவித்த ஜல் ஜீவன் திட்டம் தெரியுமா?

பிரதமர் மோடி  ராஷ்டிரிய ஜல் ஜீவன் கோஷ் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தினார். பின்னர் பேசிய அவர் "ஜல் ஜீவன் மிஷனின் பார்வை மக்களுக்கு தண்ணீரை வழங்குவது மட்டுமல்ல. இது பரவலாக்கத்தின் ஒரு பெரிய இயக்கமாகும் என தெரிவித்தார். இது கிராமத்தால் இயக்கப்படும் பெண்கள் இயக்கமாகும். அதன் முக்கிய அடிப்படை மக்கள் இயக்கம் மற்றும் மக்கள் பங்கேற்பு ஆகும் என கூறினார். இன்று, நாட்டின் 80 மாவட்டங்களில் உள்ள 1.25 லட்சம் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இதன் மூலம் குழாய் நீர் கிடைப்பத்தாகவும் பெருமைக் கொண்டார்.


கிராம தண்ணீர் வழங்கு அமைப்புகளின் திட்டமிடல், செயல்படுத்தல், மேலாண்மை, செயல்பாடு மற்றும் பராமரிப்பில் தண்ணீர் வழங்கும் குழுக்கள் (பானி சமிதி) முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் சீராக நீண்டகால அடிப்படையில் சுத்தமான தண்ணீரை குழாய் மூலம் வழங்குகிறது. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 3.5 லட்சம் கிராமங்களில் தண்ணீர் வழங்கும் குழுக்கள் (பானி சமிதி)/ கிராமப்புற தண்ணீர் மற்றும் துப்புரவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7.1 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கள பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்தி நீரின் தரத்தை பரிசோதிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.


ஜல் ஜீவன் இயக்கம் பற்றி பிரதமர் ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான தண்ணீரை குழாய் மூலம் வழங்க 15 ஆகஸ்ட், 2019 அன்று, ஜல் ஜீவன் இயக்கத்தை அறிமுகம் செய்தார் அந்த இயக்கம் தொடங்கிய நேரத்தில், 3.23 கோடி கிராமப்புற வீடுகளுக்கு மட்டுமே குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனோ தொற்றுநோய் நெருக்கடி இருந்தபோதிலும், 5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் வழி தண்ணீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இன்றுவரை, சுமார் 8.26 கோடி கிராமப்புற குடும்பங்கள் தங்கள் வீடுகளில் குழாய் வழி தண்ணீர் விநியோகத்தைப் பெற்றுள்ளன. 78 மாவட்டங்கள், 58 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 1.16 லட்சம் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீடுகளும் குழாய் வழி தண்ணீர் விநியோகத்தைப் பெறுகின்றன.
 
இதுவரை, 7.72 லட்சம் பள்ளிகள் மற்றும் 7.48 லட்சம் அங்கன்வாடி மையங்களில் குழாய் வழி தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் இயக்கம் மாநிலங்களுடன் இணைந்து 3.60 லட்சம் கோடி ரூபாயில் தொடங்கப்பட்டது. மேலும், 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் கிராமங்களில் தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்காக 15 வது நிதி ஆணையத்தின் கீழ் பஞ்சாயத் ராஜ் அமைப்புகளுக்கு 1.42 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via