ஐந்து ரூபாய் பார்லி ஜி பிஸ்கட் ஐம்பது ரூபாய்:  பீகாரில் பரவிய வதந்தி

by Editor / 02-10-2021 05:59:17pm
ஐந்து ரூபாய் பார்லி ஜி பிஸ்கட் ஐம்பது ரூபாய்:  பீகாரில் பரவிய வதந்தி

 

ஐந்து ரூபாய்க்கு விற்பனையாகும் பார்லி ஜி என்ற பிஸ்கட் திடீரென 50 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாகவும் 50 ரூபாய்க்கு கூட கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பரவிய இந்த வதந்தியால் மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை ஆகி முடிந்துவிட்டதாகவும் ஒரு சில கடைகளில் விற்பனை ஆகி வரும் நிலையில் ஐந்து ரூபாய் பிஸ்கட் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 


பீகார் மாநிலத்தில் ஜூட்டியா என்ற பண்டிகையை தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின்போது 24 மணி நேரம் விரதமிருந்து குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவார்கள். அவ்வாறு ஊட்டினால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது அம்மாநில மக்களின் நம்பிக்கை.

இந்த நிலையில் விரதம் முடிந்தவுடன் பார்லி ஜி பிஸ்கட்டை குழந்தைகளுக்குத் தரவேண்டும் என்றும் அவ்வாறு பிஸ்கட்டை குழந்தைகளுக்கு தராவிட்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்காது என்றும் வதந்தி பரவியது. இந்த வழங்கிய உண்மை என நம்பிய பீகார் மக்கள் கடைகளில் சென்று பார்லி ஜி பிஸ்கெட்டை வாங்கி குவித்தனர்.


பலசரக்கு கடை, ஷாப்கடை என அனைத்து கடைகளிலும் பார்லே ஜி பிஸ்கெட் அமோக விற்பனையானது. இதனை அடுத்து பார்லி ஜி பிஸ்கெட்டை கேட்டு மக்கள் குவிந்ததை அடுத்து அந்த பிஸ்கட்டை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அனைத்து கடைகளிலும் பிஸ்கட் விற்று தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வதந்தியை பரப்பியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via