சென்னையில் மீண்டும் 100 ரூபாய் தொட்ட பெட்ரோல்

by Editor / 03-10-2021 12:16:04pm
சென்னையில் மீண்டும் 100 ரூபாய் தொட்ட பெட்ரோல்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதுஅதன்படி சென்னையில் நேற்று ( அக்டோபர் 02) பெட்ரோல் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 95.02 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில், சென்னையில் இன்று (அக்டோபர் 03) பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ரூ 100.01 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து 95.31 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை உயர்வு காலை 6 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளது.

 

Tags :

Share via