உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 8ம் தேதி  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

by Editor / 05-10-2021 07:53:03pm
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 8ம் தேதி  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

 

நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 9ம் தேதி நடைபெறும் நிலையில் 8ம் தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்து கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது முதல் கட்டத்தில் பாளையங்கோட்டை மானூர், அம்பாசமுத்திரம், பாப்பாகுடி, சேரன்மகாதேவி ஆகிய ஒன்றியங்களிலும் இரண்டாவது கட்டத்தில் நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு, வள்ளியூர் ஆகிய ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது முதல் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது இரண்டாம் கட்ட தேர்தலில் 3 லட்சத்து 25ஆயிரத்து 827 பேர் வாக்களிக்க உள்ளனர்.

இதற்காக 567 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு 4516 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இரண்டாம் கட்ட தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு 8ம் தேதி பணி ஒதுக்கீடு அன்றைய தினமே வாக்குச்சாவடிக்கு தேர்தல் அலுவலர்கள் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டம் நடைபெறும் 9ஆம் தேதிக்கு முந்தைய நாள் 8ம் தேதியும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து  முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறும் 6 மற்றும் 9ம் தேதிகளில் பொது விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் 8ம் தேதியும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via