எம்ஜிஆர், சிவாஜி நடித்த நாடக கொட்டகை  ஆக்கிரமிப்பு விரைவில் மீட்கப்படும்  அமைச்சர் சேகர் பாபு 

by Editor / 09-10-2021 08:32:09pm
  எம்ஜிஆர், சிவாஜி நடித்த நாடக கொட்டகை  ஆக்கிரமிப்பு விரைவில் மீட்கப்படும்  அமைச்சர் சேகர் பாபு 

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் நடித்த நாடக கொட்டகையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் சென்னை மநகராட்சி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து வால்டாகஸ் சாலையில் உள்ள யானைகவுணி பக்கிங்காம் கால்வாய் பகுதியில் வட கிழக்கு பருவ மழைக்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வால்டாக்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் நடித்த நாடக கொட்டகையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,
வால்டாக்ஸ் சாலையில் உள்ள நாடக கொட்டகையில், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் நடித்து உள்ளனர். தற்போது இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாநகராட்சி உதவிடன் இந்த இடம் மீட்கப்பட்டு பொதுமக்கள் படன்படும் திட்டங்களுக்கு இந்த இடம் மாற்றப்படும் என்று கூறினார்.

 

Tags :

Share via