2ஆவது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்  78 சதவீதம் வாக்குப்பதிவு

by Editor / 11-10-2021 06:24:40pm
2ஆவது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்  78 சதவீதம் வாக்குப்பதிவு


 9 மாவட்டங் களில் நடை பெற்ற 2-வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 78.47 சதவீதவாக்குகள் பதி வாகி உள்ளதாக தமிழ் நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது .


ஊரக உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத் தப்பட்டது . 28 மாவட்டங்க ளுக்கு மட்டும் இந்த தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் , காஞ்சிபுரம் , வேலூர் , விழுப்புரம் , நெல்லை மாவட் டங்களை பிரித்து புதிய மாவட் டங்கள் அறிவிக்கப்பட்டதால் , வார்டு வரையறை போன்ற பணிகளுக் காக தேர்தல் நடத் தப்படாமல் இருந்து வந்தது . இந்த நிலை யில் , பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம் , வேலூர் , விழுப்புரம் , நெல்லை மாவட் டங்களுக்கும் , புதிதாக உதயமான செங்கல்பட்டு , ராணிப்பேட்டை , திருப்பத் தூர் , கள்ளக்குறிச்சி , தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தமிழ்நாடு மாநில தேர் தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது .


அதன்படி , இந்த 9 மாவட் டங்களில் கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் 2 கட்டங் களாக ஊரக உள்ளாட்சி தேர் தல் நடத்தப்பட்டது . முதல் கட்ட தேர்தலில் 77.43 சதவீத மும் , 2 ஆவது கட்ட தேர்தலில் 78.47 சதவீதமும் வாக்குகள் பதி வாகி யுள்ளன , வாக்கு எண் ணிக்கை (12.10.2021) நடைபெற இருக்கிறது . இந்த நிலையில் , 2 ஆவது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக , தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறப் பட்டுள்ளதாவது :


காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , வேலூர் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் , விழுப்புரம் , கள் ளக்குறிச்சி , நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங் களுக்கு உள்பட்ட 35 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தல்களுக்கான இரண்டாம் கட்டவாக்குப்பதி வும் , ஏனைய 28 மாவட்டங் களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படாத மற்றும் காலியாக உள்ள பதவி யிடங்களுக்கான தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதி வும் 9-.10.-2021 அன்று அமைதி யான முறையில் நடைபெற்றது .


மொத்தம் 78.47 சதவீத வாக் குகள் பதிவாகி உள்ளன , 28 மாவட்டங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் 70.51 சதவீதவாக்குகள் பதிவாகியுள் ளன . தென்காசி மாவட்டம் , கடையம் ஊராட்சி ஒன்றியத் திற்கு உள்பட்ட சிவசைலம் கிராம ஊராட்சி வார்டு எண் 3- க்கு நடைபெற்ற மறு வாக் குப்பதிவில் 80.79 சதவீத வாக்கு கள் பதிவாகி உள்ளன . இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

 

Tags :

Share via