ஒடிசா முதலமைச்சரை நேரில் சந்தித்த கனிமொழி

by Editor / 13-10-2021 04:28:57pm
ஒடிசா முதலமைச்சரை நேரில் சந்தித்த கனிமொழி

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. ஆகையால், அதனை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டுமென கேரளா, தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநில முதலமைச்சர்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.அதில், தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் - 2021 சட்ட முன்வடிவு, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையின் நகல் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

இந்த கடிதத்தின் மொழிபெயர்ப்பை பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கு நேரில் சென்று வழங்கி தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கோர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.அதன் ஒருபகுதியாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன்,  ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனை நேரில் சந்தித்து கடித நகலை வழங்கி ஆதரவு கோரினார்.


நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, திமுக மக்களவை உறுப்பினரும், மகளிர் அணி செயலாளருமான கனிமொழி நேரில் சந்தித்துபேசினார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினின் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசால் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் அடங்கிய கடிதத்தை நவீன் பட்நாயக்கிடம் வழங்கினார்.புவனேஷ்வர் (ஒடிசா): திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாய்க்கை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார்.

 

Tags :

Share via