சன் டிவியில் டாக்டர் படம்- ரசிகர்கள் அதிர்ச்சி

by Editor / 14-10-2021 07:23:51pm
சன் டிவியில் டாக்டர் படம்- ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் டாக்டர். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அனிருத் தான் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். கோலமாவு கோகிலா படத்தையடுத்து நெல்சன் இயக்கும் படம் இதுவாகும்.கடந்த 9ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் வசூலிலும் கலக்கி வருகின்றது.

கொரோனா காரணமாக தியேட்டரில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. அப்படியிருந்தும் இப்படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.இப்படம் வெளியாகி முழுதாக ஒருவாரம் கூட ஆகவில்லை, அதற்குள் இப்படம் டிவியில் வெளியாவது பற்றி பேச்சு எழுந்துள்ளது. இப்படம் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதே நாளில் இப்படம் சன் நெக்ஸ்டிலும் வெளியாக உள்ளதாம்.

 

Tags :

Share via